Saturday, 25 June 2011

ஒரு டோஸ் துர்க்" மருந்தும்,சர்க்கரை நோயும் .


'மதுமேகம்' என்று சித்த மற்றும் ஆயுர்வேத வைத்தியர்களால் குறிக்கப்படும் 'சர்க்கரை வியாதி ' சரி செய்யக்கூடியதா ? என்னும் கேள்வி வெகுகாலமாகவே என்னுள் இருந்த்தது. பல்வேறு அலோபதி மருத்துவ நிபுணர்கள் ,'அது' கட்டுப்படுத்த மட்டுமே கூடியது  என்ற போதும் ,அதை ஏன் குணப்படுத்த முடியாது ? என்ற கேள்வி என்னுள் இருந்துகொண்டே இருந்த்தது .பல்வேறு சித்த மருத்துவ நிபுணர்களை சந்தித்ததும் ,சித்த மருத்துவ நூல்களை படித்ததும் ,-சர்க்கரை வியாதி (அ) குறைபாடு பல்வேறு வகைப்பட்டது என அறிந்தேன் .அதில் சில சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என ஒரு சித்த மருத்துவர் நம்பிக்கை அளித்ததன் விளைவாக ,அவரது பற்ப வகைகளை சுமார் 65  நாட்கள் மிக கடுமையான பத்தியத்தோடு சாப்பிட்டும், சர்க்கரை கட்டுக்குள் வரவில்லை. இருந்தும் அப்துல்லா சாயபுவின் 'மது மேக நிவாரணி ' (தாமரை  நூலகம் ,சென்னை ) என்னும் புத்தகம் மிக மிக நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும் , தற்போது அவைகளை பின்பற்ற கூடிய அளவு பொறுமையோ வசதியோ இல்லை .

இந்த நேரத்தில் தான் ,'துர்க்' என்னும் இடத்தில் (சட்டீஸ்கர் மாநிலம் ) திரு .சேக் இசுமாயில் என்பவர் ஒருவேளை மருந்திலேயே சர்க்கரை குறைபாட்டை குணப்படுத்துவதாக கேள்வி பட்டேன்.உடனே சூன் 9-ம் தேதி சென்னையிலிருந்து கிளம்பி 10-ம் தேதி 'துர்க்' அடைந்தேன் .
தமிழ் முகத்தை பார்த்தாலே ரிக்க்ஷா மனிதர்கள் 'சுகர் மெடிசின ,
சுகர் மெடிசின' என்பது தவிர்க்க முடியாதது .சுமார் மூன்று மணியளவில் மசூதிக்கு சென்று ,அடுத்த நாள் மருந்துக்கு டோக்கன் ரூபாய் 35/ வாங்கும்போதுதான் கவனித்தேன் ,பக்கத்தில் இருந்த இருவர் தமிழில் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களோடு அறிமுகப்படுத்தி கொண்டு ,அவர்களோடு சென்று ஒரு விடுதியில் தங்கினோம். 



அடுத்த நாள் காலை டோக்கன் நம்பர் படி உள்ளே அனுமதித்தனர் .வெளியில் காத்திருந்த கூட்டத்தில் பாதிக்கு மேலானோர் தமிழகத்திலிருந்து வந்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . பெரும்பாலோர் கொங்குசீமையில் இருந்து ,பலனடைந்தவர்களை கண்டும், கேட்டும்  வந்திருந்தனர். ஒரு முறைக்கு சுமார் 75-80 நபர்கள் அனுமதிக்கப்பட்டனர் . வரிசைப்படி அங்கு அமர்ந்திருந்த முசுலிம் தம்பதியர் முன்னர் அமர்ந்து வலது  கையை நீட்ட ,பெண்களுக்கு திரு .இசுமையிலும் ஆண்களுக்கு அவர் மனைவியும் கை நிறைய 'தூளாய்' இருந்த மருந்தை வைத்து ,ஒரு பெரிய டம்ளரில் கொட்டி கையில் கொடுத்து மீண்டும் வரிசையில் அமர சொன்னனர் .அங்கு பணியிலிருப்பவர்களில் சிலர் நமது டம்ளரை வாங்கி நிறைய பால் விட்டு 'ஓதி' நமக்கு கொடுத்து சீக்கிரம் -சீக்கிரம் குடிக்க சொல்கின்றனர் .அந்த மருந்து ரொம்ப கசந்தாலும் ( ராவா குடிக்கிறவங்க நாங்க -ஒரு குரல் ) நான் சிந்தாமல் குடித்தேன் .ஆனால் அருகிலிருந்த பலர் குமட்டிக்கொண்டே குடித்ததும் ,சிலர் வாந்தி எடுத்ததும் நடந்ததது .

வாந்தி எடுத்தால் வெளியில் அனுப்பி விடுகின்றனர்.எல்லாரும் குடித்ததும் இந்தியில் ஒரு விரிவுரை நிகழ்த்தினார் ஒருவர் .அதன் சாராம்சம் 
1) அடுத்த 4 மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக் கூடாது 
1a) எச்சில் உமிழக்கூடாது 
2) அடுத்த 30 நாட்களுக்கு மாங்காய் ,புளி மற்றும் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது.
3) இது தவிர அனைத்தையும் நான்கு மணி நேரத்திற்கு பிறகு சாப்பிடலாம் (சர்க்கரையும் சேர்த்தது தான் )
4) ரத்த சர்க்கரை அளவை 30 நாட்களுக்கு பிறகு பரிசோதிக்கலாம் .என்பன போன்றது .
நானும் தற்போது 'கண்டதையும்' சாப்பிட்டுக்கொண்டும் ,குடித்துக்கொண்டும்  உள்ளேன் .தற்போது வரை மாத்திரை எதுவும் எடுக்க வில்லை .ஆனாலும் பிரச்சனை எதுவும் இல்லை. 

அங்கு வந்திருந்த பலரும் ,மற்றவர்களுக்கு குமானதாலே தானும் வந்தததாக கூறினர். நான் எனது விடுதி அறையை காலி செய்த போது, சூட் இரண்டை பதிவு செய்து கொண்டிருந்தது ஒரு சவுதி அரேபிய குடும்பம் - சந்தேகமே இல்லாமல் சர்க்கரைக்கு மருந்தெடுக்க தான் வந்திருந்தனர்.

கட்டணம் -டோக்கன் ரூ .35/
                    பாலும் மருந்தும் ரூ .121/


வாழ்க வளமுடன் !
மகிழ்ச்சியாக வாழுங்கள் !!

1 comment:

Kalai said...

Thanks. How are you now? Diabetes cured?

Post a Comment